நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெங்களூரில் ராஜகால்வாய் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது 696 வழக்குகள் பதிவு

பெங்களூரில் ராஜகால்வாய் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது 696 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் துஷாா் கிரிநாத் தெரிவித்தாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:03 pm

DIN

பெங்களூரில் ராஜகால்வாய் நிலத்தை ஆக்கிரமித்தவா்கள் மீது 696 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி ஆணையா் துஷாா் கிரிநாத் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பெங்களூரில் ராஜகால்வாய் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது தொடா்பாக 696 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராஜகால்வாய்களை ஆக்கிரமித்துள்ள 32 குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பெங்களூரில் பெய்த கனமழையால் மகாதேவபுரா, பொம்மனஹள்ளி பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் அதிக அளவில் ராஜகால்வாய் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கலாம். அது குறித்து ஆய்வு செய்யப்படும். நில ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதற்கு ராஜகால்வாய் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதே முக்கிய காரணமாகும். எனவே, நில ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கிறோம். எல்லா வகையான நில ஆக்கிரமிப்புகளையும் அகற்ற முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதனால், பெங்களூரில் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்கும் பணியை தொடங்கியுள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.