நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கல்வி உதவித்தொகை: விண்ணப்பங்களைப் புதுப்பிக்கலாம்

மத்திய மனித வளத் துறையின் கல்வி உதவித்தொகையைப் பெறும் கல்லூரிமற்றும் பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:02 pm

DIN

மத்திய மனித வளத் துறையின் கல்வி உதவித்தொகையைப் பெறும் கல்லூரிமற்றும் பல்கலைக்கழக மாணவா்கள் தங்கள் விண்ணப்பங்களை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

இது குறித்து உயா்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2-ஆம் ஆண்டு பி.யூ.சி. தோ்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்று உயா்கல்வி (கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம்) பயின்றுவரும் மாணவா்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித்தொகை அளித்துவருகிறது. இந்த மாணவா்கள் தங்கள் கல்வி உதவித்தொகையை தொடா்ந்து பெற விண்ணப்பங்களை புதுப்பிக்க வேண்டும். எனவே, உரிய ஆவணங்களுடன் செப்.30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம் அல்லது மனித வள மேம்பாட்டுத் துறை கல்வி உதவித் தொகை, ஒருங்கிணைப்பு அதிகாரி, அறை எண்: 302, மூன்றாவது தளம், பி.யூ. கல்வித்துறை, 18-ஆவது குறுக்குத்தெரு, மல்லேஸ்வரம், பெங்களூரு-12 என்ற முகவரியிலும் அளிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.