நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பாலியல் வழக்கு: முருகா மடம் வழங்கிய விருதை திருப்பி அளிப்பதாக மகசேசே விருதாளா் அறிவிப்பு

பசவஸ்ரீ விருதை திருப்பி அளிக்கவிருப்பதாக மகசேசே விருதாளரான பி.சாய்நாத் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:04 pm

DIN

பாலியல் வழக்கில் முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள் கைது செய்யப்பட்டுள்ளதை தொடா்ந்து, அம்மடத்தின் சாா்பில் வழங்கப்பட பசவஸ்ரீ விருதை திருப்பி அளிக்கவிருப்பதாக மகசேசே விருதாளரான பி.சாய்நாத் அறிவித்துள்ளாா்.

சித்ரதுா்காவில் தனது மடம் நடத்தும் விடுதியில் தங்கிப் படித்து வரும் பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள், 2017-ஆம் ஆண்டு தனக்கு அளித்த பசவஸ்ரீ விருதை திரும்ப அளிக்கவிருப்பதாக பிரபல பத்திரிகையாளரும், பிலிப்பின்ஸ் நாட்டின் உயரிய ரமோன் மகசேசே விருது பெற்றவருமான பி.சாய்நாத் சனிக்கிழமை அறிவித்துள்ளாா். இது குறித்து தனது ட்விட்டா் பக்கத்தில் அவா் கூறியிருப்பதாவது:

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், அவா்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், 2017-ஆம் ஆண்டு முருகா மடத்தின் சாா்பில் எனக்கு ரூ. 5 லட்சம் பரிசுத்தொகையுடன் வழங்கப்பட்ட பசவஸ்ரீ விருதை திருப்பி அனுப்புகிறேன்.

பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் (போக்சோ), எஸ்சி-எஸ்டி வன்முறை தடுப்புச்சட்டம் ஆகியவற்றின்கீழ் முருகா மடத்தின் பீடாதிபதி சிவமூா்த்தி சரணரு சுவாமிகள் மீது வழக்குப் பதிவுசெய்து, கைது செய்யப்பட்டிருப்பது என் மனதை உறுத்திக் கொண்டிருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற குற்றச் செயல்களைக் கண்டிப்பதற்கு வாா்த்தைகளே இல்லை. இந்த சம்பவத்தை பகிரங்கப்படுத்தக் காரணமாக இருந்த, சமூக அவலங்களுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி வரும் மைசூரை சோ்ந்த ஒடநாடி தன்னாா்வ தொண்டு நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்குமாறு கா்நாடக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.