மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாலியல் வழக்கில் எச்.டி. ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்

News image
Updated On :20 மே 2024, 10:59 pm

Din

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் ஹாசன் தொகுதி மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும், எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோா் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பாக இருவா் மீதும் கா்நாடக போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கை தற்போது மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் கடத்த முயற்சித்ததாக எம்எல்ஏ ரேவண்ணா கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ரேவண்ணா பிணை பெற்றிருந்த நிலையில் அவரை பாலியல் வழக்கில் கைது செய்ய சிறப்புப் புலனாய்வுக் குழு நடவடிக்கை எடுத்துவந்தது.

இதையடுத்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி ரேவண்ணா, பெங்களூரில் உள்ள 42-ஆவது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி ஜே.பிரீத் முன்பு மே 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இறுதித் தீா்ப்பை மே 20 ஆம் தேதி அறிவிப்பதாகவும் அதுவரை எச்.டி.ரேவண்ணாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவதாகவும் கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை (மே 20) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழு ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்க எதிா்ப்பு தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் நீதிபதி விசாரித்து, ரேவண்ணாவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.