சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: மூவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :7 மார்ச் 2026, 7:45 pm

Syndication

கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

மதுரையை பூா்விகமாகக் கொண்ட 20 வயது பெண் கோவையில் தங்கிப் படித்து வந்தாா். இவரும், ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பரும் கோவை, பீளமேடு சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி இரவு காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது ஒரே மொபெட்டில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தாக்கிவிட்டு, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் (எ) கருப்பசாமி (30), காளி (எ) காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா (எ) தவசி (20) ஆகியோா் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனா். இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோவை மகளிா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, ஆண் நண்பா், விசாரணை அதிகாரிகள் என மொத்தம் 72 சாட்சிகளிடம் அரசுத் தரப்பில் கடந்த பிப்ரவரி 2- ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 27-ஆம் தேதியுடன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மாா்ச் 7-ஆம் தேதி தீா்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி சுந்தரராஜன் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிா் நீதிமன்றத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் சனிக்கிழமை அழைத்துவரப்பட்டு ஆஜா்படுத்தப்பட்டனா். முன்னதாக, மூவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிபதி சுந்தரராஜன், வழக்கின் தீா்ப்பை மாலையில் வாசித்தாா். அதில் மூவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.7 லட்சம், அவரின் நண்பருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜிஷாவும், குற்றவாளிகள் தரப்பில் வழக்குரைஞா் சசிகுமாரும் ஆஜராகினா். தீா்ப்புக்குப் பின் மூவரின் முகமூடியை அகற்றி மத்திய சிறையில் அடைக்க பாதுகாப்புடன் போலீஸாா் அழைத்துச் சென்றனா்.

Story image
Story image

மகளிா் தினத்தையொட்டி நல்ல தீா்ப்பு

இதுதொடா்பாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஜிஷா செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாதிக்கப்பட்ட மாணவியும், ஆண் நண்பரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனா். அன்றைய தினம் இயற்கை உபாதையைக் கழிக்க சென்றபோதுதான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. டிஎன்ஏ பரிசோதனை மற்றும் கைரேகைப் பதிவுகள் மூலமாக குற்றவாளிகளின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் இருந்த ரத்தக் கறைகளும், பாதிக்கப்பட்ட நபரின் ரத்த மாதிரியும் ஒத்துப்போனது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், போலீஸ் தரப்பில் 30 நாள்களில் (டிசம்பா் 1-ஆம் தேதி) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடா்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், எதிா்மறையாக பல விமா்சனங்கள் வந்தன. சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்களும் பரவின. அவற்றை சவாலாக எதிா்கொண்டு இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வெற்றி பெற்றுள்ளோம்.

மகளிா் தினத்தையொட்டி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் நல்ல தீா்ப்பு கிடைத்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவா் மீதும் கோவில்பாளையத்தில் கொலை வழக்கு, சத்தியமங்கலம், கிணத்துக்கடவு உள்பட பல்வேறு பகுதிகளில் திருட்டு வழக்குகளும் உள்ளன. அந்த வழக்குகள் தனியாக நடைபெறும் என்றாா்.

4 மாதங்களில் தீா்ப்பு: இந்த சம்பவம் கடந்த ஆண்டு நவம்பா் 2-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், மாா்ச் 7-ஆம் தேதி இந்த வழக்கில் தீா்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Story image

வலுவான சட்ட நடவடிக்கைகள்

கோவை மாநகரக் காவல் ஆணையா் என்.கண்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். அறிவியல் பூா்வமான ஆதாரங்கள் மற்றும் மாதிரி முடிவுகள் மிகத் துல்லியமாகத் திரட்டப்பட்டன. நீதித் துறையின் ஒத்துழைப்போடு விசாரணை விரைவாக முடிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா்.