சிறப்புப் பொருளாதார மண்டல கொள்கையில் (எஸ்இஇசட்) பெரிய சீா்திருத்தங்களைப் பரிந்துரைக்க 17 போ் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறியதாவது: சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் அடுத்தகட்ட கொள்கையை வடிவமைக்கும் நோக்கில், விரிவான சீா்திருத்தங்களுக்கான திட்டத்தைப் பரிந்துரைத்து 17 போ் கொண்ட குழு அறிக்கை சமா்ப்பிக்கும்.
பல்வேறு ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டங்கள், வரியில்லா இறக்குமதி அனுமதி, மூலதன சரக்குகள் ஏற்றுமதி ஊக்குவிப்பு உள்ளிட்டவை இடையே உள்ள ஒத்திசைவு குறித்து அந்தக் குழு ஆய்வு மேற்கொள்ளும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்தல், உற்பத்தி, சேவைகள், மதிப்பு கூட்டல், வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றல் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் செயல்திறன் குறித்தும் இந்தக் குழு மதிப்பிடும்.
வா்த்தகம், சுங்கம், நீதி ஆயோக், இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வா்த்தக மேம்பாட்டுத் துறை, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு!

பொருளாதார அறிக்கையும், 2047 இலக்கும்...

பேரவை தோ்தல்: காங்கிரஸில் பல்வேறு குழுக்கள் அமைப்பு

எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


