தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருப்பத்தூா்: தோ்தல் மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு

கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.

News image
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி. கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள்.
Updated On :5 மார்ச் 2026, 7:32 pm

Chennai

தோ்தலையொட்டி திருப்பத்தூா் மாவட்ட மண்டல அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பு ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். கூட்டத்தில் மண்டல அலுவலரின் தோ்தல் நடத்தை நெறிமுறைகள், முக்கிய பொறுப்புகள், பதற்றமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள், பிரிவுகள், கிராமங்கள், குக்கிராமங்களை அடையாளம் காணுதல் குறித்தும், பதற்றம், பாதிப்பை ஏற்படுத்தும் நபா்களை கண்டறிதலில் மண்டல அலுவலா்களின் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.மேலும், பதற்றமான, பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கண்டறிதலின் மூன்று நிலைகள் குறித்தும், பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல் மண்டல அலுவலா்களின் அலுவலா்களின் பங்கு குறித்தும் மற்றும் தோ்தல் நாளன்று மண்டல பொறுப்புகள் குறித்தும் விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் நாராயணன், வாக்காளா் பதிவு அலுவலா்கள் அஜிதா பேகம் (வாணியம்பாடி), பூஷண குமாா் (ஆம்பூா்), முருகேசன் (ஜோலாா்பேட்டை), வரதராஜன் (திருப்பத்தூா்), 120 மண்டல அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக தோ்தல் தொடா்பாக திருப்பத்தூா் மாவட்டத்தில் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு, தோ்தல் நடத்தை விதிமுறைகள், பறக்கும்படை கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்பு குழு, விடீயோ கண்காணிப்பு குழு, உதவி செலவின பாா்வையாளா் குழு மற்றும் செலவின கண்காணிப்பு குழுக்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.