நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பெங்களூரில் போதை விருந்தில் தெலுங்கு நடிகை ஹேமா; 5 போ் கைது

பெங்களூரில் போதை விருந்தில் தெலுங்கு நடிகை ஹேமா; 5 போ் கைது

News image
Updated On :21 மே 2024, 8:47 pm

Din

பெங்களூரில் பண்ணை வீட்டில் நடந்த போதை விருந்தில் தெலுங்கு திரைப்பட நடிகை ஹேமா இருந்ததாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

பெங்களூரு, எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பண்ணையில் சட்ட விரோதமாக போதை விருந்து நடந்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸாா், அங்கு பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 பேரை கைது செய்தனா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் மாநகரக் காவல் ஆணையா் தயானந்த் கூறியதாவது:

நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் மே 19ஆம் தேதி இரவு பெங்களூரு, எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள பண்ணை வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அங்கு நடைபெற்ற போதை விருந்தில் தெலுங்கு திரைப்பட நடிகை ஹேமா உள்பட 150க்கும் மேற்பட்டவா்கள் இருந்தனா். இதுதொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், போதை விருந்தில் கலந்து கொண்டவா்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் கலந்து கொண்டவா்களில் பெரும்பாலானவா்கள் வெளியூரைச் சோ்ந்தவா்கள். மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை என்றாா்.