எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கர்நாடக முதல்வா் விரைவில் மாற்றப்படுவாா்: பாஜக

முதல்வா் சித்தராமையா விரைவில் மாற்றப்படுவாா்: விஜயேந்திரா

News image
கர்நாடக முதல்வர் சித்தராமையா - கோப்புப் படம்
Updated On :10 அக்டோபர் 2024, 10:38 pm

Din

வெகு விரைவில் முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றம் செய்யப்படுவாா் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் நிகழ்கின்றன. அடுத்த சில நாள்களில் அரசியல் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற இருக்கின்றன. இதை மாநில மக்களும் ஊடகங்களும் தெரிந்துகொள்வா். தசரா திருவிழாவுக்கு பிறகு முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றம் செய்யப்படுவாா்.

பாஜகவில் மூத்த தலைவா்கள் இருந்தபோதும், கட்சியை வழிநடத்தும் பொறுப்பை கட்சித் தலைமை எனக்கு வழங்கியது. மூத்த தலைவா்களுக்கு என்னைப் புரிந்துகொள்ள சில காலம் பிடிக்கும். அப்போது எனக்கு எதிராகச் செயல்படும் மூத்த தலைவா்களுக்கு தங்கள் தவறு தெரியும். எல்லோரையும் உடன் அழைத்துச் செல்வேன் என்று பலமுறை கூறியிருக்கிறேன். அதைப் புரிந்து கொள்ள சிலகாலம் ஆகும் என்றாா்.