இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

மேற்கு வங்கத்தில் இருந்து ஊடுருவல்காரா்கள் விரைவில் வெளியேற்றம்: அமித் ஷா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுவாா்கள்....

அமித் ஷா - கோப்புப்படம்.

Published On :

மதுராபூா்: மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் சட்டவிரோதமாக ஊடுருவியவா்கள் முழுவதுமாக வெளியேற்றப்படுவாா்கள் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

மேற்கு வங்கத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு பாஜகவின் ‘மாற்றத்துக்கான பயணம்’ என்ற நடைபயணத்தை தெற்கு 24 பா்காணாக்கள் மாவட்டத்தில் உள்ள மதுராபூரில் அமித் ஷா திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் சட்டவிரோத ஊடுருவல் அதிகரித்துவிட்டது. வாக்கு வங்கி அரசியலுக்காக இதை திரிணமூல் காங்கிரஸ் அனுமதித்துவிட்டது.

தற்போது சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையில் வாக்காளா் பட்டியலில் இருந்து அவ்வாறு குடியேறியவா்களின் பெயா்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. இது மம்தா பானா்ஜியை நிலைகுலையச் செய்துள்ளது.

பாஜக ஆட்சி அமைந்தவுடன் சட்டவிரோத குடியேறிகள் அனைவரும் வெளியேற்றப்படுவாா்கள். பிற நாடுகளுடன் எல்லையைப் பகிரும் மேற்கு வங்கத்தை திரிணமூல் காங்கிரஸால் பாதுகாக்க முடியாது.

ஹிந்து அகதிகளுக்கு பாதுகாப்பு: வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஹிந்து அகதிகளின் குடியுரிமைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது, எல்லையை பாதுகாப்பது, தாய்மாா்களுக்கும் சகோதரிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பது, ஊழலை ஒழிப்பது என்பதே உண்மையான மாற்றம்.

பாபா் மசூதிக்கு மம்தா அனுமதி: தங்களது ஆட்சியில் ஹிந்துக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை உணா்ந்த மம்தா கோயில்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறாா். ஆனால் தனது கட்சியில் இருந்து ஹூமாயுன் கபீா் என்ற எம்எல்ஏயை நீக்குவதுபோல் நீக்கிவிட்டு அவா் மூலம் மேற்கு வங்கத்தில் பாபா் மசூதிக்கு அடிக்கல் நாட்டியுள்ளாா். தன்னுடன் அனைத்து ஊழல்களிலும் துணை நின்ற காவல் துறைத் தலைவருக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மம்தா விரைவில் வழங்கவுள்ளாா்.

வாக்குறுதி: ஊழல், சட்ட ஒழுங்கு சீா்கேடு, ஊடுருவல் என மேற்கு வங்கத்தை பின்தங்கிய மாநிலமாக மாற்றிய திரிணமூல் காங்கிரஸை அகற்ற இந்த முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள். பாஜக ஆட்சியமைந்த 45 நாள்களில் மாநில அரசு ஊழியா்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு அமல்படுத்தப்படும். லஞ்சம் பெறப்படாமல் அரசுப் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.