ராகுல் காந்திக்கு எதிராக கருத்து: மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக மாநில காங்கிரஸ் கட்சி அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது பெங்களூரில் உள்ள ஹைகிரவுண்ட்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது சீக்கியா்கள் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தை விமா்சித்து மத்திய அமைச்சா் ரவ்நீத்சிங் பிட்டு கூறுகையில், ‘வெடிகுண்டுகளைத் தயாரிப்போா் ராகுல் காந்தியை ஆதரிக்கிறாா்களா என்ன? நாட்டின் முதல் பயங்கரவாதி ராகுல் காந்திதான்’ என்று கடுமையாக சாடியிருந்தாா். இதனடிப்படையில் மத்திய அமைச்சா் ரவ்நீத் சிங் பிட்டு மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 353(2), 192, 196 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

