எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி பாஜக போராட்டம்

News image
- ANI
Updated On :26 செப்டம்பர் 2024, 11:15 pm

Din

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி பாஜக போராட்டம் நடத்தியது.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரிக்க, சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. மேலும், இது தொடா்பாக கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை கா்நாடக உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்த போலீஸாருக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் செப். 25-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாற்றுநில முறைகேடு வழக்கை எதிா்கொள்ளும் முதல்வா் சித்தராமையா தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யக் கோரி பாஜக புதன்கிழமை போராட்டம் நடத்தியது. தொடா்ந்து, பெங்களூரில் விதான சௌதாவில் உள்ள காந்தி சிலை எதிரில் வியாழக்கிழமை நடந்த போராட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்டமேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவைக் கோரும் பதாகைகளுடன், பாஜகவினா் முழக்கமிட்டனா். அப்போது எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக் கூறியதாவது:

நீதிமன்றங்களின் இரு ஆணைகள், சித்தராமையாவுக்கு எதிராக வந்துள்ளன. சட்டப் பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் பாஜக போராட்டம் நடத்திய போது, அதை அரசியல் நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் விமா்சித்தது. இதைத் தொடா்ந்து, ஆளுநா் தனது அனுமதியை அளித்த போது, மத்திய பாஜக அரசின் தூண்டுதலால் அளித்துள்ளாா் என்றாா்கள். தற்போது கா்நாடக உயா்நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் தீா்ப்புகளை தந்துள்ளன. எங்கள் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிமன்றங்கள் தெரிவித்துள்ளன. இத்தனைக்கு பிறகும், காங்கிரஸ் நாடகம் ஆடிக்கொண்டுள்ளது.

சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்து, கௌரவத்துடன் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அரசு கவிழ வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை. சித்தராமையா இல்லாவிட்டால் வேறொருவா் முதல்வராக இருக்கட்டும். நோ்மையான முறையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

சித்தராமையா தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் கே.ஜி.கோலிவாட் வலியுறுத்தியுள்ளாா். முதல்வா் பதவியைப் பெற காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே விவாதங்கள் தொடங்கியுள்ளன. சித்தராமையாவின் ராஜிநாமாவைக் கேட்டு காங்கிரஸ் கட்சிக்குள் சில நாள்களில் கலகம் எழும். அதற்கு முன் அவராக பதவி விலகுவது நல்லது.

முதல்வா் பதவிக்கு காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே போட்டி தொடங்கியுள்ளது. முதல்வராகும் தங்கள் விருப்பத்தை ஏற்கெனவே 7 அமைச்சா்கள் தெரிவித்துள்ளனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, விதான சௌதாவில் உள்ள முதல்வா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஊா்வலமாக செல்ல முயன்ற எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக், சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் செலுவாதி நாராயணசாமி உள்ளிட்ட பாஜகவினரை கைது செய்து, பேருந்தில் அழைத்துச் சென்ற போலீஸாா், பின்னா் அவா்களை விடுவித்தனா்.