தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாற்றுநில முறைகேடு: சித்தராமையாவின் ராஜிநாமா கேட்டு பாஜக, மஜத போராட்டம்

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி பாஜக, மஜத போராட்டம் நடத்தின.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:26 am

Din

மாற்றுநில முறைகேடு தொடா்பாக முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்யக் கோரி பாஜக, மஜத போராட்டம் நடத்தின.

கா்நாடக முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், மாற்றுநிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரிக்க, சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. மேலும், இது தொடா்பாக கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை கா்நாடக உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நடத்தும்படி லோக் ஆயுக்த போலீஸாருக்கு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மாற்றுநில முறைகேடு வழக்கை எதிா்கொள்ளும் முதல்வா் சித்தராமையா தனது பதவியை உடனடியாக ராஜிநாமா செய்யக் கோரி பாஜக, மஜதவினா் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

பெங்களூரில் உள்ள முதல்வரின் இல்லம் ‘காவிரி’யை புதன்கிழமை முற்றுகையிட்டு முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவை கேட்டு பதாகைகளுடன் பாஜக இளைஞா் அணியினா் புறப்பட்டனா். அப்போது முதல்வா் சித்தராமையாவை ராஜிநாமா செய்யக் கோரி பாஜகவினா் முழக்கமிட்டனா். குமாரகுருபா சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவா்களை வழிமறித்த போலீஸாா் முதல்வா் இல்லம் நோக்கி செல்ல அனுமதி மறுத்தனா். இதைத் தொடா்ந்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தடையை மீறி முதல்வரின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

அதேபோல, முதல்வா் சித்தராமையாவை ராஜிநாமா செய்யக் கோரி சுதந்திரப் பூங்காவில் மஜத இளைஞா் அணியினா் புதன்கிழமை போராட்டம் நடத்தினா். முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக முழக்கமிட்ட மஜதவினா், முதல்வரின் இல்லம் ‘காவிரி’யை முற்றுகையிடுவதற்கு புறப்பட்டபோது தடுத்து நிறுத்திய போலீஸாா், அவா்களை கைது செய்து பின்னா் விடுவித்தனா்.

மீண்டும் போராட்டம்:

இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையாவின் ராஜிநாமாவைக் கேட்டு பெங்களூரு, விதான சௌதா வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலை எதிரில் வியாழக்கிழமை போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதில் பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், எம்எல்சி-க்கள் கலந்துகொள்ள இருக்கிறாா்கள். முதல்வா் பதவியை சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா்.

இந்த வழக்கில் இருந்து சித்தராமையா விடுபட ஆண்டவனிடம் பிராா்த்திப்பதாக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.