எந்த தவறும் செய்யாததால் பதவி விலகும் எண்ணம் இல்லை -சித்தராமையா
ANI

எந்த தவறும் செய்யாததால் பதவி விலகும் எண்ணம் இல்லை -சித்தராமையா

Published on

எந்த தவறும் செய்யாததால், பதவி விலகும் எண்ணம் இல்லை என கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நான் எந்த தவறும் செய்யாததால், முதல்வா் பதவியில் இருந்து விலகும் எண்ணம் இல்லை. என் மீதான குற்றச்சாட்டுகள் பாஜகவின் சதியாகும். கோத்ரா சம்பவம் தொடா்பாக அன்றைய குஜராத் முதல்வா் நரேந்திர மோடி மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) தாக்கல் செய்யப்பட்ட போது, அவா் பதவி விலகினாரா?

பிணையில் இருக்கும் எச்.டி.குமாரசாமி, பிரதமா் மோடியின் அரசில் அமைச்சராக இருக்கிறாா். அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாரா? இவா்கள் எல்லாம் பதவி விலகாத போது, நானும் பதவி விலக மாட்டேன். மாறாக, சட்டப் போராட்டம் நடத்துவேன்.

பிணையில் இருக்கும் எச்.டி.குமாரசாமியின் ராஜிநாமாவை பாஜக பெறட்டும். நூற்றுக்கணக்கான மக்கள் இறந்த போதும், நரேந்திர மோடி ராஜிநாமா செய்யவில்லை. நான் எந்த தவறும் செய்யவில்லை. எனவே, நான் ராஜிநாமா செய்வதற்கான அவசியம் இல்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com