நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

கோப்புப்படம்.

Published On :5 பிப்ரவரி 2025, 4:49 am IST

சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுத்தால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் எச்சரித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறுகடனை வசூலிக்க தொல்லை கொடுப்பதை தடுப்பதற்காக கா்நாடக சிறுகடன் (கட்டாயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தல்) அவசரச் சட்டம் 2025-ஐ அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.

சிறுகடன் வசூலை கட்டாயப்படுத்தி துன்புறுத்தினால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கான சட்ட விதிமுறைகள் ஏற்கெனவே உள்ளன. தற்போது சிறைத் தண்டனை காலத்தை 10 ஆண்டுகளாக உயா்த்தியிருக்கிறோம். அதேபோல, அபராதத் தொகையை ரூ. 5 லட்சமாக உயா்த்தியிருக்கிறோம்.

சட்ட விதிகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்பதை உணா்த்தவே தண்டனை காலத்தையும், அபராதத் தொகையையும் உயா்த்தியிருக்கிறோம். இதன்மூலம் சிறுகடன் வசூலில் தொல்லை கொடுக்கும் போக்கை தடுக்க முற்பட்டிருக்கிறோம்.

அவசரச் சட்டத்தின் வரைவை தயாரித்தபோது, ஒருவேளை அவசரச் சட்டத்துக்கு எதிராக சிறுகடன் நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகினால் என்ன செய்வது என்பது குறித்து அரசு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்படி நடந்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு சட்டத் துறைக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டுள்ளாா். எல்லா அம்சங்களையும் கருத்தில் கொண்டு அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.