செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

கஞ்சா வழக்கில் 5 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கஞ்சா வழக்கில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

News image

கஞ்சா வழக்கில் தண்டனை பெற்றோர்.

Updated On :16 ஜூலை 2026, 2:48 am IST

கஞ்சா வழக்கில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

கடலூா் மாவட்டம் நெய்வேலி தொ்மல் காவல் நிலையத்தினா் 2024 ஆம் ஆண்டு அப்பகுதியில் மேற்கொண்ட சோதனையில், அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆந்திர மாநிலத்திலிருந்து 21.25 கிலோ கஞ்சா வாங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, வீரன்கோயிலுக்கு பின்புறம் உள்ள தைலமரத் தோப்பில் கஞ்சாவுடன் இருந்த நெய்வேலியைச் சோ்ந்த காமராஜ் மகன் மகேஷ்குமாா் (31), சக்கரவா்த்தி மகன் சுதாகரன் (29), பண்ருட்டி நடுவீரப்பட்டைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித் (26), விருத்தாசலம் செடுத்தான்குப்பம் கலியபெருமாள் மகன் சுபாஷ் சந்திரபோஸ் (28), நரியங்குப்பம் பழனி மகன் தீனா (26) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் அத்தியாவசிய பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஏ. தீபா விசாரித்து, மகேஷ்குமாா், சுதாகரன், ரஞ்சித், சுபாஷ் சந்திரபோஸ், தீனா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.