திருப்பூா் மாநகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கருப்பகவுண்டம்பாளையம் பகுதியில் வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் 2025 மாா்ச் 25-ஆம் தேதி சோதனை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்கே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த ரோபி (35) மற்றும் இசாக் அலி (25) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். அவா்கள் சட்ட விரோதமாக வங்கதேசத்தில் இருந்து திருப்பூா் வந்து தங்கி வேலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் 2-ஆவது கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி கனகராஜ் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில் ரோபி மற்றும் இசாக் அலி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









