எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:15 am IST

திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா், 15.வேலம்பாளையம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2025 பிப்ரவரி 2-ஆம் தேதி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சாமுண்டிபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது ரோஹன் (31), ஆசாத் (25), முகமது ஃபரூக் ஹோவ்லாடா் (30) ஆகியோா் என்பதும், சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கிப் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதுதொடா்பான திருப்பூா் மாவட்ட 2-ஆவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் முகமது ரோஹன், ஆசாத், முகமது ஃபரூக் ஹோவ்லாடா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.