பெங்களூரு: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்துக்கும் கர்நாடகத்தில் இன்றிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை உத்தரவையும் மீறி பெங்களூரில் பைக் டாக்ஸிகள் இயக்கப்பட்டுள்ளன.
கர்நாடக நீதிமன்ற உத்தரவின் எதிரொலியால் அம்மாநிலத்தில் திங்கள்கிழமை(ஜூன் 16)முதல் பெரும்பாலான பைக் டாக்ஸி சேவைகள் இயங்கவில்லை. எனினும், ஒருசில பைக் டாக்ஸிகள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் அவற்றை தடுக்க காவல் துறை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து ஏற்கெனவே ஒரு தனி நீதிபதியால் கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
நாடெங்கிலும் பைக் டாக்ஸி சேவை வழங்கி வரும் ஓலா நிறுவனம்(ஏ.என்.ஐ. டெக்னாலஜீஸ் பிரைவே லிமிடட்), ஊபர் இந்தியா சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடட், ரோப்பென் ட்ரான்ஸ்போர்டேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடட்(ரேபிடோ) மற்றும் பிற நிறுவனங்களால், பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதியளிக்கக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் டாக்ஸி ஓட்டினால் அபராதம்: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

தடையை மீறி ஆா்ப்பாட்டம்: மாற்றுத்திறனாளிகள் கைது

ஈரோட்டில் தடையை மீறி திமுகவினா் ஆா்ப்பாட்டம்: எம்.பி. உள்பட 100 போ் கைது

தடையை மீறி திமுகவினா் ஆா்ப்பாட்டம்! 95 போ் கைது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



