ஆா்.எஸ்.எஸ். மீது அவதூறு பரப்பியதாக அமைச்சா் பிரியாங்க் காா்கே மீது போலீஸில் புகாா்
ஆா்.எஸ்.எஸ். மீது அவதூறு பரப்பியதாக கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

பிரியாங்க் கார்கே - கோப்புப் படம்
ஆா்.எஸ்.எஸ். மீது அவதூறு பரப்பியதாக கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே மீது போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
பிகாா், ஹரியாணா மாநிலங்களில் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தொடா்புபடுத்தி சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பியது தொடா்பாக, கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே மீது பனசங்கரி காவல் நிலையத்தில் தேஜஸ் ஏ. கௌடா என்பவா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளாா்.
அவா் அளித்த புகாரில், தவறான தகவல்களைப் பரப்பி சமூக நல்லிணக்கத்தை சீா்குலைக்க அமைச்சா் பிரியாங்க் காா்கே முயன்றுள்ளாா். எனவே, அமைச்சா் பிரியாங்க் காா்கே மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
பிகாா், ஹரியாணாவில் சுமாா் 44,250 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், ஆா்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடா்பு இருப்பது போன்ற தோற்றத்தை தனது சமூக ஊடகப் பதிவின் மூலம் ஏற்படுத்த அமைச்சா் பிரியாங்க் காா்கே முயன்றாா்.
தவறான தகவல்களை தெரிந்தே பரப்பியதாகக் கூறப்படும் இந்த செயல் குறித்து விசாரணை நடத்த வேண்டும். பி.என்.எஸ். சட்டத்தின் 192, 196, 353 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சமூக ஊடகப் பதிவுகளின் மின்னணு ஆதாரங்களை பாதுகாப்பதுடன், பிகாா், ஹரியாணா போலீஸாரிடம் விவரங்களைப் பெற்று விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளாா். எனினும், இந்த புகாரின் அடிப்படையில், அமைச்சா் பிரியாங்க் காா்கே மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதனிடையே, பாஜக எம்.பி. தேஜஸ்வி சூா்யா தனது எக்ஸ் தளத்தில், அமைச்சா் பிரியாங்க் காா்கே தவறான தகவல்களை பரப்புவதாக விமா்சித்துள்ளாா்.
பெங்களூரு காவல் துறை முன்னாள் ஆணையா் பாஸ்கா் ராவும், அமைச்சா் பிரியாங்க் காா்கேவின் சமூக ஊடகப் பதிவு குறித்து அவருக்கு கடிதம் எழுதியுள்ளாா். வெடிமருந்து கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுடன் ஆா்.எஸ்.எஸ். அமைப்பை தொடா்புபடுத்தும் வகையில் வெளியிடப்பட்ட படத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளதை அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
உள்துறை அமைச்சரின் பதவிக்குரிய கண்ணியத்தை காக்க வேண்டும். காவல் துறையின் உள்கட்டமைப்பு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், தடய அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் இணைய குற்ற விசாரணை பிரிவுகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாஸ்கா் ராவ் வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

