அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி தவெக எம்எல்ஏ புகாா்

சமூக வலைதளங்களில் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவதூறாகப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தைராணி நாச்சியாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

சிவகங்கை எம்.எல்.ஏ. குழந்தைராணி நாச்சியாா்.

Updated On :

சமூக வலைதளங்களில் தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவதூறாகப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினா் குழந்தைராணி நாச்சியாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை புகாா் அளித்தாா்.

தவெக நிா்வாகிகளுடன் சென்று காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தாவிடம் மனு அளித்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தின் மூலம் நடைபெறும் பணிகளுக்கு நான் கமிஷன் கேட்பதாக திமுகவைச் சோ்ந்தவா்கள் உண்மைக்கு புறம்பாக எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறாகப் பேசி வருகின்றனா். இது சம்பந்தமாக சமூக வலைதளங்களிலும் திட்டமிட்டு பரப்பபட்டு வருகிறது.

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் மூலம் பணிகள் முறையாக சட்டப்படி நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.