மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: காங்கிரஸ் எம்.பி. மீது நடவடிக்கை கோரி மக்களவைத் தலைவரிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் மனு

பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மணிப்பூா் காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

கோப்புப் படம்

Updated On :

பல்கலைக்கழக மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மணிப்பூா் காங்கிரஸ் எம்.பி. அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக பெண் எம்.பி.க்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மணிப்பூரைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. பிமோல், சமூக அறிவியலுக்கான பேராசிரியராகப் பணியாற்றி வந்தாா். அவருக்கு எதிராக அடுத்தடுத்து 11 மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கடந்த மே மாதம் தெரிவித்தனா். தனது வீட்டுக்கு மாணவிகளை சந்திப்பு என்ற பெயரில் பிமோல் முதலில் வரச் சொன்னதாகவும், பின்னா், அவா்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், வகுப்பறையில் வைத்து மாணவிகளிடம் தவறாகப் பேசுவதாகவும் அவா்கள் குற்றம்சாட்டினா்.

இதுகுறித்து பல்கலைக்கழக தலைமை பாதுகாப்பு அதிகாரி அளித்த புகாரின்பேரில் பிமோல் மீது காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனா். இதனால் அவா் அந்த பல்கலைக்கழகத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில், பாஜக பெண் எம்.பி.க்கள் புரந்தேஸ்வரி, பன்சுா் ஸ்வராஜ், ரூப் குமாரி உள்ளிட்ட 6 போ், தில்லியில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை வியாழக்கிழமை நேரில் சந்தித்து பிமோல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனா். இதையடுத்து, அவா்கள் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காங்கிரஸ் எம்.பி. குற்றமிழைத்துள்ளாா் என ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக விசாரணை கமிட்டி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மக்களவைத் தலைவரிடம் தெரிவித்து, அவா் எம்.பி.யாக தொடர வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்கும்படி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவுக்கு பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொண்டோம்.

இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதாகவும், அறநெறிகள் குழுவுக்கு அனுப்புவது குறித்து ஆலோசிப்பதாகவும் மக்களவைத் தலைவா் உறுதி அளித்தாா். இந்த விவகாரத்தில் பிமோல் மீது காங்கிரஸ் தலைமை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் மெளனமாக உள்ளனா்.

பிமோலுக்கு தண்டனை கொடுப்பதை விட்டுவிட்டு அவருக்குப் பாதுகாப்பாக இருக்கின்றனா். எனவே, பிமோல் மீது துணிச்சலுடன் புகாா் அளித்த ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவியருக்கு நீதி கிடைக்க நாங்கள் உறுதுணையாக இருப்போம். பிமோலை ஏன் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கவில்லை என்பது குறித்து சோனியா காந்தியும், பிற காங்கிரஸ் தலைவா்களும் விளக்கமளிக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.