அண்ணாமலைப் பல்கலையில் நாளை சர்வதேச கருத்தரங்கம்

சிதம்பரம், ஜன.8: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் வரும் 10, 11, 12 ஆகிய  தேதிகளில் இயற்கை பொருள்கள், உயிர் மருத்துவ தொழில்நுட்பம் என்ற தலைப்பில் 3
Updated on
1 min read

சிதம்பரம், ஜன.8: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உயிர் வேதியியல், உயிர் தொழில்நுட்பவியல் துறை சார்பில் வரும் 10, 11, 12 ஆகிய  தேதிகளில் இயற்கை பொருள்கள், உயிர் மருத்துவ தொழில்நுட்பம் என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது.

 பல்கலைக்கழக லிபரா ஹாலில் வருகிற 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு கருத்தரங்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

 மத்திய கலாசாரம், பாராளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் வி.நாராயணசாமி கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தலைமை வகிக்கிறார்.  தில்லி தேசிய மூலிகை கழக ஆலோசகர் ஜி.எஸ்.லவேக்கர் சிறப்புரையாற்றுகிறார்.

 இக் கருத்தரங்கில் வெளிநாடுகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com