சாக்கடை தேங்கும் ஆரம்பாக்கம் சாலை
கும்மிடிப்பூண்டி, ஜன. 8: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடைகள் அதிகமாக நிரம்பியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் சாக்கடை ஓடை போல பல மாதக்கணக்கில் ஓடுகிறது. கும்மிடிப்பூண்டியை


கும்மிடிப்பூண்டி, ஜன. 8: கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் கடைகள் அதிகமாக நிரம்பியுள்ள தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் சாக்கடை ஓடை போல பல மாதக்கணக்கில் ஓடுகிறது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியானது சுற்று வட்டாரத்தில் உள்ள பூவலை, தண்டலம், எகுமதுரை, நாயுடுகுப்பம், தோக்கமூர் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வந்து போகும் பகுதியாகும்.
மேற்கண்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கு செல்ல ரயில் மற்றும் பஸ்ஸýக்காக ஆரம்பாக்கம்தான் வர வேண்டும். இப்படி அதிகாலை முதல் நள்ளிரவு வரை மக்கள் நடமாட்டம் இருக்கக் கூடிய ஆரம்பாக்கம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையில் மாதக்கணக்கில் சாக்கடை நீர் ஓடுகிறது.
மேற்கண்ட சாக்கடை ஓடும் பகுதியில் அதிகமான கடைகள் உள்ளதோடு இந்த சாலை வழியே பொதுமக்களும், ஆரம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு ஆயிரம் மாணவர்கள் தினமும் சென்று வருகின்றனர்.
அதே நேரம் சாக்கடை நீர் ஓடும் இடத்தை ஒட்டி பிள்ளையார் கோயில் ஒன்றும் உள்ளது. தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த சாக்கடை நீர் சாலையை கடந்துதான் கோயிலுக்கு சென்று வழிபட்டு திரும்ப வேண்டும்.
சின்னஞ்சிறுவர்களும், வயோதிகர்களும் சாக்கடை நீரில் இறங்கியபடி இந்த சர்வீஸ் சாலையை கடந்து செல்லும் அவல நிலை உள்ளது.
அதே நேரம் சாக்கடை தேங்கி செல்லும் பகுதியில் தாங்க முடியாத துர்நாற்றமும், கொசுக்கள் உற்பத்தி ஆகி பொது சுகாதாரத்துக்கு சீர்கேட்டையும் விளைவிக்கிறது.
தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் சர்வீஸ் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை உரிய முறையில் பராமரிக்காததால் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பின் வழியே சாக்கடை நீர் வெளியேறி சர்வீஸ் சாலை வழியாக ஓடுகிறது.
தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் இது குறித்து பல முறை ஆரம்பாக்கம் ஊராட்சியின் சார்பில் புகார் அளித்தும் இந்த குறைபாடு சரிசெய்யப்படவில்லை. எனவே பொது சுகாதாரத்துக்குக் கேடு விளைவிக்கும் வகையில் சாலை வழியே சாக்கடை நீர் ஓடாதபடி தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என ஆரம்பாக்கம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...