திருவள்ளுவர் குருகுலத்தில் தமிழர் திருநாள் விழா
உத்தரமேரூர், ஜன. 8: உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் காரணை மண்டபம் திருவள்ளுவர் குருகுலத்தில் தமிழர் திருநாள் விழா அண்மையில் நடந்தது. குழந்தைகளுடன் புதுப்பானையில் பொங்கலிட்டு விழா கொண்டாடப்பட்டது. ரோட்ட


உத்தரமேரூர், ஜன. 8: உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியம் காரணை மண்டபம் திருவள்ளுவர் குருகுலத்தில் தமிழர் திருநாள் விழா அண்மையில் நடந்தது. குழந்தைகளுடன் புதுப்பானையில் பொங்கலிட்டு விழா கொண்டாடப்பட்டது.
ரோட்டரி மாவட்டம் 3,230 சார்பாக 28 ரோட்டரி சங்கங்கள் இணைந்து ஆதரவற்ற 225 பள்ளி மாணவ மாணவியருக்கு புத்தாடைகளும், உணவும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு உத்தரமேரூர் ரோட்டரி சங்கத் தலைவர் கே.வி.சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் வி.பி.ஜான் முன்னிலை வகித்தார், பூபாலன் வரவேற்றார். தமிழ்நாடு முதன்மை தணிக்கை அதிகாரி சி.ஆர். எஸ்.ரங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஆனந்த் சிறப்புரையாற்றினார். ரோட்டரி சங்கம் சார்பில் ரங்கராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கே.டி.எஸ். ராமனின் மாஜிக் ஷோ நடந்தது. கிராமிய கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி நடந்தது. ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆர்.ராமகிருஷ்ணன், ஆர்.ஜெயகுமார், கே.கரிகாலன், அ.முனியசாமி,ஆகியோர் பங்கேற்றனர். திருவள்ளுவர் குருகுல செயலாளர் எஸ்.சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...