ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பள்ளிக்கு நான்கு கி.மீ. நடந்தே செல்லும் மாணவர்கள்!

செய்யாறு, ஆக. 28: செய்யாறை அடுத்துள்ள நெமிலி கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் படிப்பதற்காக தினமும் 4 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்கின்றனர். திருவண்ணாம

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:06 am

தே.சாலமன்

செய்யாறு, ஆக. 28: செய்யாறை அடுத்துள்ள நெமிலி கிராமத்தில் தொடக்கப் பள்ளி இல்லாததால், அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் படிப்பதற்காக தினமும் 4 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெம்பாக்கம் ஒன்றியத்துக்குள்பட்டது நெமிலி ஊராட்சி. இக் கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன.

ஊர் மற்றும் காலனிப் பகுதிகளில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை சுமார் 150 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இக் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லாததால் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தினமும் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறுநல்லூர் தொடக்கப் பள்ளிக்கு நடந்தே சென்று படித்து வருகின்றனர்.

அதேபோல 5-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுப்பாளையம் அல்லது உக்கல் கிராமத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கின்றனர்.

மேலும் பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கு 15 கி.மீ. தொலைவு பயணம் செய்து மாமண்டூர், பெருநகர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லவேண்டியுள்ளது.

இதனால் இந்த கிராமத்து மாணவர்கள் பெரும்பாலோர் அதிகபட்சம் உயர்நிலைப் பள்ளி வரை மட்டுமே படித்துவிட்டு விவசாயப் பணிகளை செய்கின்றனர்.

50 ஆண்டு கால கோரிக்கை:  நெமிலியில் தொடக்கப் பள்ளி அமைக்க வேண்டும் என்பது இக்கிராம மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை.

இது தொடர்பாக கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை கோரிக்கை முன்வைத்தும் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கின்றனர்.

பெற்றோர்கள் அச்சம்: சிறுநல்லூர் சென்று படித்து வர சரியான பஸ் வசதியில்லாதக் காரணத்தால் மாணவர்கள் நடந்துச் செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.

உக்கல் கிராமத்து பள்ளிக் கூடத்துக்கு 3 கிலோமீட்டர் தொலைவு ஏரிக்கரை வழியாகச் செல்ல வேண்டியுள்ளது. ஏரிக்கரை வழியில் பாம்பு மற்றும் விஷபூச்சிகள் அதிகம் உள்ளதால், பள்ளிக்கு சென்று குழந்தைகள் வீடு திரும்பும் வரையில் பெற்றோர்கள் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது.

நெமிலி ஊராட்சி சார்பில் பள்ளிக்கு தேவையான இடம் அளிக்க, கிராம மக்கள் தயாராக உள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

எனவே மாணவர்களின் நலன் கருதி இக் கிராமத்தில் பள்ளி ஒன்றைத் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.