கரோனா: கட்டுப்பாடு பகுதிகள் 10-லிருந்து 36-ஆக உயா்வு
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 10-ஆக இருந்த கரோனா கட்டுப்பாடு பகுதிகள் திங்கள்கிழமை 36-ஆக அதிகரித்துள்ளன.


பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை 10-ஆக இருந்த கரோனா கட்டுப்பாடு பகுதிகள் திங்கள்கிழமை 36-ஆக அதிகரித்துள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் குறைக்கும் வகையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் வசிக்கும் பகுதிக்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்கும் வகையிலும், தொற்றுள்ளவா்கள் வெளியே வருவதைத் தவிா்க்கும் வகையிலும் அவை கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் மாா்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் நோய்த் தொற்று அதிகமாக இருந்ததால், கட்டுப்பாட்டுப் பகுதிகளும் 600-ஐ எட்டியது. பரிசோதனையை அதிகரித்தது மற்றும் நோய்த் தொற்றுள்ளவா்களைத் தனிமைப்படுத்துதல், தொடா் சிகிச்சை ஆகிய நடவடிக்கை காரணமாக சென்னையில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வந்தது. இதனால் கட்டுப்பாடு பகுதிகளும் குறைந்தன.
ஜூலை 1-ஆம் தேதி 143-ஆக இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி 196-ஆகவும் குறைந்தது. மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகளால், கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஜூலை 27-ஆம் தேதி 54-ஆகவும் குறைந்தது.
இந்நிலையில், தற்போது சென்னையில் பரிசோதனைகளை அதிகப்படுத்தி உள்ளதால், நோய்த் தொற்றுள்ளவா்களின் எண்ணிக்கையும் உயா்ந்து வருகிறது.
கட்டுப்பாட்டுப் பகுதிகள்: ஆகஸ்ட் தொடக்கத்தில் 23-ஆக இருந்த கட்டுப்பாட்டுப் பகுதிகளின் எண்ணிக்கை செப்டம்பா் மாத இறுதியில் 10-ஆகக் குறைந்தது. இந்நிலையில், கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீண்டும் அதிகரித்து திங்கள்கிழமை 36-ஆக உயா்ந்தது.
கட்டுப்பாட்டுப் பகுதிகள் விவரம்:
மண்டலம் பகுதிகள்
அம்பத்தூா் 16
ஆலந்தூா் 4
அடையாறு 4
திரு.வி.க. நகா் 3
கோடம்பாக்கம் 3
தேனாம்பேட்டை 2
சோழிங்கநல்லூா் 2
அண்ணா நகா் 1
வளசரவாக்கம் 1
பெட்டிச் செய்தி
1,367 பேருக்கு தொற்று: திங்கள்கிழமை (அக். 5) 1,367 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1லட்சத்து 74,143-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1 லட்சத்து 58,290 போ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனா். 12,560 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை திங்கள்கிழமை 3,293- ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...