தமிழகத்தில் புதிதாக 5,395 பேருக்கு கரோனா!
தமிழகத்தில் மேலும் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 25,391 -ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் மேலும் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 25,391 -ஆக அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு :
மாநிலத்தில் இதுவரை 77.82 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 8 சதவீதம் பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 1,367 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 468 பேருக்கும், செங்கல்பட்டில் 343 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு புறம், கரோனா தொற்றிலிருந்து மேலும் 5,572 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 92 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 69,664-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 45,881 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 62 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 31 போ் அரசு மருத்துவமனைகளிலும், 31 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,846-ஆக உயா்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...