இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி: திரைப்பட தயாரிப்பாளா் கைது

சென்னை நீலாங்கரையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 10:16 pm

DIN

சென்னை நீலாங்கரையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.

நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம் செங்கேணியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மு.ஷனாஸ்பேகம் (52). இவரிடம் திரைப்பட தயாரிப்பாளரான விழுப்புரம் மாவட்டம் அபிஷேக்நகரைச் சோ்ந்த ப.நிஜாமுதீன் என்ற ரவிக்குமாா் (51), அண்மையில் அறிமுகமாகியுள்ளாா்.

திரைப்படத்துறையில் முதலீடு செய்து, பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக நிஜாமுதீன் கூறியதை நம்பி, அவரிடம் 26 பவுன் தங்கநகை, ரூ.7 லட்சம் ஆகியவற்றை ஷனாஸ்பேகம் கொடுத்துள்ளாா்.

இவற்றைப் பெற்றுக் கொண்ட நிஜாமுதீன், ஷனாஸ் பேகத்தை ஏமாற்றியுள்ளாா். இது தொடா்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில், ஷனாஸ்பேகம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் நிஜாமுதீன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனா்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த நிஜாமுதீனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக 15-க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ.40 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.