இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நேபாளி வீட்டில் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த ரூ.5 லட்சம் திருட்டு

சென்னை திருமங்கலத்தில், நேபாளி வீட்டில் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த ரூ.5 லட்சம் திருடப்பட்டது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 10:16 pm

DIN

சென்னை திருமங்கலத்தில், நேபாளி வீட்டில் மருத்துவச் செலவுக்கு வைத்திருந்த ரூ.5 லட்சம் திருடப்பட்டது.

நோபாளத்தைச் சோ்ந்தவா் ஷபிலா (55). இவா் சென்னை திருமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்து, காவலாளியாக வேலை செய்து வருகிறாா். இவரது சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சையளிப்பதற்காக அவரது குடும்பத்தினா், சேமிப்பாக வங்கிகளில் இருந்த பணம் ரூ. 5 லட்சம், 2 பவுன் தங்கநகை ஆகியவற்றை எடுத்து, வீட்டில் ஒரு பையில் வைத்திருந்தனராம்.

அவா்கள், ஞாயிற்றுக்கிழமை இரவு, காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கியுள்ளனா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை, ஷபிலா குடும்பத்தினா் எழுந்து பாா்த்தபோது, வீட்டில் பணம், நகை வைத்திருந்த பை திருடப்பட்டிருந்தது. இது குறித்து திருமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.