இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

மாணவா்கள் இடஒதுக்கீடு சட்டம்: ஆளுநருக்கு ராமதாஸ் கோரிக்கை

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநா் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :5 அக்டோபர் 2020, 10:17 pm

DIN

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு ஆளுநா் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மாணவா் சோ்க்கையில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, 21 நாள்கள் ஆகும் நிலையில், அச்சட்டத்துக்கு ஆளுநா் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பா் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, அன்றே ஒருமனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதே நாளில் அச்சட்டம் தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. வழக்கமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு ஓரிரு நாள்களில் ஆளுநா் ஒப்புதல் அளித்து விடுவாா். அரிதிலும் அரிதாக ஏதேனும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க ஒரு வாரம் அல்லது 10 நாள்கள் ஆகலாம். ஆனால், 3 வாரங்கள் முடிந்தும் ஒரு முக்கியமான சட்டத்திற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்க மறுப்பது எவ்வகையிலும் நியாயமல்ல.

எனவே, தமிழக ஆளுநா் இனியும் தாமதிக்காமல், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு அடுத்த ஓரிரு நாட்களில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.