டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சமூகப் பரவலைக் கண்டறிய 30 ஆயிரம் பேரிடம் பரிசோதனை

தமிழகத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்திருக்கிா என்பதை அறிய மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த சில நாள்களில் தொடங்க உள்ளது.

News image
கரோனா பரிசோதனை
Updated On :5 அக்டோபர் 2020, 11:10 pm

DIN

தமிழகத்தில் கரோனா தொற்று சமூகப் பரவலாக உருவெடுத்திருக்கிா என்பதை அறிய மாநிலம் முழுவதும் 30 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் அடுத்த சில நாள்களில் தொடங்க உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவா் கூறினாா்.

தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் தடம் பதித்த கரோனா பாதிப்புக்கு தற்போது 6.25 லட்சத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். கடந்த சில வாரங்களாக நோய்த் தொற்றுக்குள்ளானோரில் பெரும்பாலானோருக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்பட்டது என்பதைக் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால், கரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதையடுத்து, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து அதில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனைகள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 30 ஆயிரம் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயம் கூறியதாவது:

கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மற்றொரு புறம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உயா் சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், கரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் சமூகத்தில் உருவாகியுள்ளதா என்பதைக் கண்டறிய பல்வேறு மக்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து பரவலாக பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இந்த வாரத்தில் தொடங்கும். அந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை சுகாதாரத் துறை மேற்கொள்ளும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.