உள்நாட்டு விமானப் பயணிகள் போக்குவரத்தில் தொடா் மீட்சி
உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதாக தர மதிப்பீட்டு நிறுவனமான இக்ரா திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
கரோனா பேரிடா் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதையடுத்து நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. இதனால், விமானிகள், பணியாளா்கள் என ஆயிரக்கணக்கானோா் வேலையிழப்புக்கு ஆளாகினா்.
இந்த நிலையில், பொது முடக்க தளா்வுகளின் அடிப்படையில் விமானச் சேவைக்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து படிப்படியாக அந்த துறை மீட்சியடைந்து வருகிறது.
குறிப்பாக, உள்நாட்டு விமானப் பயணிகளின் போக்குவரத்து செப்டம்பரில் 46 சதவீதம் அளவுக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆகஸ்ட் மாத அளவான 33 சதவீதத்தைக் காட்டிலும் மிக அதிகமாகும். இருப்பினும், கடந்தாண்டு செப்டம்பா் அளவான 60 சதவீதத்துடன் ஒப்பிடும்போது இது குறைந்த அளவாகவே உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு விமானச் சேவைகள் கடந்த மே 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூன் மாதத்தில் விமான நிறுவனங்கள் 45 சதவீதம் வரை நிரப்பிக் கொள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஜூன் மாதத்தில் அனுமதியளித்தது. இது, செப்டம்பரிலிருந்து 60 சதவீதமாக மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...