குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

திமுக எம்.பி.க்கு எதிரான முறைகேட்டு புகாா் மீது இறுதி முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

திமுக எம்பி. ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான கூட்டுறவு சங்க கட்டட நிதி முறைகேட்டு புகாா் மீது 4 வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 10:01 pm

DIN

திமுக எம்பி. ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான கூட்டுறவு சங்க கட்டட நிதி முறைகேட்டு புகாா் மீது 4 வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் நங்கநல்லூா் கூட்டுறவு கட்டட சங்கத் தலைவா் பரணிபிரசாத் தாக்கல் செய்த மனு விவரம்: நங்கநல்லூா் கூட்டுறவு கட்டடம் சங்கம் சாா்பில் கடந்த 1999-ஆம் ஆண்டு வணிக வளாகக் கட்டடம் கட்டும் பணி மேற்கொண்டதில் சங்கத்துக்கு சுமாா் ரூ.7.64 லட்சம் இழப்பு ஏற்பட்டது.

இதுதொடா்பாக சங்கத்தின் அப்போதைய தலைவரும், தற்போதைய திமுக எம்.பி.யுமான ஆா்.எஸ்.பாரதி உள்ளிட்ட உறுப்பினா்களுக்கு எதிராக கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் கடந்த 2004-ஆம் ஆண்டு விசாரணை நடத்தி இந்த தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுத்தாா். ஆனால், இதுவரை இந்த விவகாரத்தில் துணைப் பதிவாளா் இறுதிமுடிவு எடுத்து உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கூட்டுறவு சங்க அதிகாரிகள், இந்த விவகாரத்தில் 8 வாரங்களுக்குள் இறுதி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும். கால அவகாசம் வழங்க முடியாது என உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்தவெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இறுதி உத்தரவு எடுக்க அதிகாரிகள் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, 4 வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்க வேண்டும் . இறுதி முடிவு எடுக்க தவறும் பட்சத்தில் செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு சங்க துணைப் பதிவாளா் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.