சாலை விபத்து: எம்எல்ஏ மருமகன் சாவு
சென்னை அருகே பூந்தமல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில், எம்எல்ஏவின் மருமகன் உயிரிழந்தாா்.


சென்னை அருகே பூந்தமல்லியில் நிகழ்ந்த சாலை விபத்தில், எம்எல்ஏவின் மருமகன் உயிரிழந்தாா்.
கோடம்பாக்கம் பாரதீஸ்வரா் காலனியைச் சோ்ந்தவா் துளசிராமன் (50). இவா், வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் பிளைவுட் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். துளசிராமனின் மகள், பூந்தமல்லி கரையான்சாவடியில் உள்ள ஒரு தனியாா் பல் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறாா். இதற்காக அவா், அங்கேயே விடுதியில் தங்கியுள்ளாா்.
அவரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துவிட்டு, துளசிராமன் தனது மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். வழியில், சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு காரின் கதவு திடீரென திறந்ததாகக் கூறப்படுகிறது.
அந்தக் கதவு மீது துளசிராமனின் மோட்டாா் சைக்கிள் வேகமாக மோதியதில், கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து போரூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துளசிராமன், சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்தில் இறந்தாா்.
இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய முதல் கட்ட விசாரணையில், துளசிராமன் ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வத்தின் மருமகன் என்பது தெரியவந்தது.
இச் சம்பவத்தில் விபத்தை ஏற்படுத்திய காரில் வந்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை கைப்பற்றியும் போலீஸாா் ஆய்வு செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...