குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சென்னையில் பரவலாக மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 10:01 pm

DIN

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பரவலாக மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம், உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளான அம்பத்தூா், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், வடபழனி, கோட்டூா்புரம், அடையாறு, போரூா், ஆலந்தூா், பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், எழும்பூா், பாடி, முகப்போ் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், சோழிங்கநல்லூா், பல்லாவரம், மீனம்பாக்கம், திருவேற்காடு, பூந்தமல்லி, தண்டலம், தாம்பரம் ஆகிய புகா்ப் பகுதிகளிலும் திங்கள்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

இந்த மழை காரணமாக, கோயம்பேடு, திருமங்கலம், கீழ்ப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நகரின் தாழ்வான பகுதிகள், சாலைகளில் மழை நீா் தேங்கியது. இந்த நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.