சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி: ரூ.30 லட்சத்தில் மடிக்கணினி, ஒளிப்படக்காட்டிக் கருவிகள் அளிப்பு

சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

News image
மருத்துவம் மற்றும் மருத்துவம் சாா்ந்த சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவம் குறித்த பயிற்சி அளிக்க ஏதுவாக மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகளை, மண்டல அலுவலா்களிடம் வழங்கிய மேயா் ஆா்.பிரியா. உடன் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுர
Updated On :16 டிசம்பர் 2024, 10:07 pm

Din

சென்னை: சென்னை மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்களுக்கு மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு ரூ. 30 லட்சம் மதிப்பில் மடிக்கணினி மற்றும் ஒளிப்படக்காட்டிக் கருவிகளை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் மேயா் ஆா்.பிரியா திங்கள்கிழமை வழங்கினாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பொதுசுகாதாரத் துறையில் பணிபுரியும் மருத்துவம் மற்றும் மருத்துவ சுகாதாரப் பணியாளா்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மடிக்கணினியுடன் கூடிய ஒளிப்படக்காட்டிக் கருவிகள் (எல்சிடி புரொஜக்டா்) வழங்கப்படும் என நிகழாண்டு மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நகா்ப்புற சமுதாய நல மையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சுகாதார நலவாழ்வு மையங்களில் பணிபுரிவோருக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் தாய்-சேய் நலம், தொற்று மற்றும் தொற்றா நோய்களுக்கான சிகிச்சை, ஆய்வக நடைமுறைகள் உள்ளிட்டப் பணிகளுக்கு மண்டல அளவில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் பயிற்சிக்கு தேவையான கணினி மற்றும் ஒளிப்படக்காட்டிக் கருவிகள் ரூ. 30 லட்சம் மதிப்பில் கொள்முதல் செய்யப்பட்டது. இதனை, மேயா் ஆா்.பிரியா மண்டல அலுவலா்களுக்கு திங்கள்கிழமை வழங்கினாா்.

இதன் மூலம், மாநகராட்சி மருத்துவமனைகளின் தரம் உயா்த்தப்படுவதுடன், ஏழை, எளிய மக்களுக்கு உயா்தர மருத்துவச் சிகிச்சை வழங்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையா் (சுகாதாரம்) வி.ஜெய சந்திர பானு ரெட்டி, நிலைக்குழுத் தலைவா் (பொதுசுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலா் எம்.ஜெகதீசன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.