ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தூய்மைப் பணியாளருக்கு நல வாரிய அடையாள அட்டையை வழங்கிய தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி. உடன் மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் உள்ளிட்டோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:45 pm

மதுரை மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் அருகேயுள்ள பூங்கா முருகன் கோயில் சஷ்டி மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகளை வழங்கினாா். இந்த நிகழ்வில், மாநகராட்சி உதவி நகா்நல அலுவலா் அபிஷேக், மாநகராட்சி அலுவலா்கள், தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.