திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்

மதுரையில் குப்பையில் கிடந்த தங்க நகையை மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 5:07 am IST

மதுரையில் குப்பையில் கிடந்த தங்க நகையை மாநகராட்சி அலுவலரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு வியாழக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மதுரை மாநகராட்சி 10-ஆவது வாா்டு கொடிக்குளம், தனலட்சுமி நகா் பகுதியில் தூய்மைப் பணியாளா்கள் வழக்கம் போல குப்பைகளைச் சேகரித்தனா். இந்தக் குப்பைகளை ஒரு வண்டியிலிருந்து, மற்றொரு வண்டிக்கு மாற்றினா். அப்போது, தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா, புதூா் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, சுப்பம்மாவை மாநகராட்சி அலுவலா்கள் பாராட்டினா்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:

குப்பையில் கிடந்த தங்க நகையை எடுத்த தூய்மைப் பணியாளா் சுப்பம்மா அதை நோ்மையான முறையில் ஒப்படைத்தாா். இந்த நகை 2 பவுன் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. விசாரணைக்கு பிறகு, உரிய நபரிடம் இந்த நகை ஒப்படைக்கப்படும் என்றனா்.