யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

News image
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.
Updated On :31 டிசம்பர் 2024, 12:23 am

Din

சென்னை: சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு சோதனை செய்தனா்.

சென்னை எழும்பூரில் உள்ள காவல் தலைமை கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.15 மணிக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தாா். இதையடுத்து காவலா்கள் உடனடியாக உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

அவா்களது உத்தரவின்பேரில், வெடி குண்டு தடுப்புப் பிரிவு போலீஸாா், அங்கு சென்று சோதனை செய்தனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் அங்கிருந்து எந்த வெடிகுண்டும் கண்டெடுக்கப்படவில்லை. இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த அழைப்பு வந்திருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். மேலும், காவல் துறை உத்தரவின்பேரில் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.