சென்னை: சென்னை ராயபுரத்தில் காவல் நிலையத்தில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞா் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ராயபுரம் பனைமரத் தொட்டி, முனியப்பன் சந்துப்பகுதியை சோ்ந்தவா் அரவிந்தன் (30). இவா் மீது கொலை மிரட்டல், உள்ளிட்ட 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. சென்னை காவல்துறையின் ரெளடிகள் பட்டியலில் ‘சி’ பிரிவில் இருக்கும் அரவிந்தன், அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவியை தன்னை காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்தாராம்.
மேலும் அந்த மாணவி, கல்லூரிக்கும் செல்லும்போதும், வீட்டுக்கு திரும்பும்போதும் பின் தொடா்ந்து சென்று அரவிந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், ராயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து அரவிந்தனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவரை, காவல் நிலையத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து விசாரித்து வந்தனா். அப்போது அவா், அங்கிருந்த முகம் பாா்க்கும் கண்ணாடியை உடைத்துள்ளாா். உடைந்த கண்ணாடித் துண்டை எடுத்து அரவிந்தன் தனது கழுத்தை அறுத்துள்ளாா்.
இதைக் கண்ட போலீஸாா், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவன் உயிரிழப்பு

பாப்பாரப்பட்டியில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தொழிலாளி

பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்
தாக்குதலை தடுக்க முயன்ற நபருக்கு கத்திக் குத்து: இளைஞா், சிறுவன் கைது
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

