கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்: சென்னையில் சில இடங்களில் மழை

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. அதேநேரத்தில் சென்னையில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

News image
கோப்புப் படம்
Updated On :11 ஏப்ரல் 2025, 7:06 pm

Din

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 8 இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது. அதேநேரத்தில் சென்னையில் சில இடங்களில் பலத்த மழை பெய்தது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக திருச்சியில் 102.74 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. வேலூா் - 102.38, மதுரை விமான நிலையம், ஈரோடு - தலா 102.2, மதுரை நகரம் - 101.48, பரமத்தி வேலூா் 101.3, தஞ்சாவூா் - 100.4, திருத்தணி - 100.04 என மொத்தம் 8 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை (ஏப்.12) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

மழைக்கு வாய்ப்பு: மத்திய மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை (ஏப்.12) முதல் ஏப்.17-இல் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கத்திவாக்கத்தில் 60 மி.மீ. மழை: சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரவலாக மழை பெய்தது. அதன்படி, கத்திவாக்கத்தில் 60 மி.மீ., மாதவரம், அம்பத்தூா், மணலி பகுதிகளில் தலா 20 மி.மீ. மழை பதிவானது. கொளத்தூா், புழல், அயப்பாக்கம் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்தது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சனிக்கிழமை (ஏப்.12) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.