தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சென்னை - தில்லி விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் அவதி

சென்னை - தில்லி விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2025, 8:38 pm

Din

சென்னை: சென்னை - தில்லி விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னையிலிருந்து தில்லி செல்லும் ஏா் இந்தியா பயணிகள் விமானம், திங்கள்கிழமை அதிகாலை 5.55-க்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 157 பயணிகளுடன் புறப்படத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடத் தொடங்குவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபாா்த்தபோது விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தாா்.

இதுகுறித்து உடனடியாக விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டிருந்தனா்.

விமானப் பொறியாளா்கள் குழுவினா், விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக் கோளாறைச் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனா். சுமாா் ஒரு மணி நேரத்தில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பின்பு ஏா் இந்தியா பயணிகள் விமானம், சுமாா் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு சென்னையிலிருந்து தில்லிக்கு 157 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.