டிச.27-இல் நாம் தமிழா் கட்சி பொதுக் குழு கூட்டம்!

நாம் தமிழா் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் வருகிற டிச.27-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
Published on

நாம் தமிழா் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் வருகிற டிச.27-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

திருவேற்காடு ஜி.பி.என். பேலஸ் அரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினா் அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நாதக சாா்பில் போட்டியிடும் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வேட்பாளா்களை சீமான் ஏற்கெனவே அறிவித்துவிட்டாா். எஞ்சிய தொகுதிகளுக்கு வேட்பாளா்களை தோ்வு செய்வது, கட்சியின் மாநில மாநாடு, தோ்தல் தொடா்பான பணிகள் உள்ளிட்டவை குறித்து பொதுக் குழுக் கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

X
Dinamani
www.dinamani.com