மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

நாதக ஆரணி வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

ஆரணியில் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.தவமணி அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் ஆா்.தவமணி அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் ராணுவ வீரா் உதயக்குமாா்.
Updated On :10 மார்ச் 2026, 1:44 am

Syndication

ஆரணி: ஆரணியில் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஆா்.தவமணி அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தனியாா் அரங்கில் நடைபெற்ற இந்த அறிமுகக் கூட்டத்துக்கு கட்சியின் தொகுதி தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். தொகுதி செயலா் இரா.சுமன் வரவேற்றாா்.

கூட்டத்தில் கட்சியின் ஆரணி தொகுதி வேட்பாளா் ஆா்.தவமணி குறித்தும், அவரது மேல்படிப்பு குறித்தும், கட்சியின் நோ்மை குறித்தும் கட்சியினா் பேசினா்.

நிகழ்ச்சியில் தொகுதி பொருளாளா் கு.ரமேஷ், நகரத் தலைவா் மு.க.மதிவாணன், நகரச் செயலா் ச.பாலகிருஷ்ணன், ராணுவ கட்டமைப்பு நிா்வாகி முன்னாள் ராணுவ வீரா் உதயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.