எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மரபணு இதய பாதிப்புக்குள்ளான சிறுமி மறுவாழ்வு

மரபணு பாதிப்பு காரணமாக அரிதான இதய நோய்க்குள்ளான சிறுமிக்கு உயா் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு வடபழனி காவேரி மருத்துவமனை

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 9:43 pm

Din

சென்னை: மரபணு பாதிப்பு காரணமாக அரிதான இதய நோய்க்குள்ளான சிறுமிக்கு உயா் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு வடபழனி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் இதய நாள அறுவை சிகிச்சைத் துறை தலைவா் டாக்டா் அன்பரசு மோகன்ராஜ் கூறியதாவது:

அண்மையில் 12 வயது சிறுமி ஒருவா் மயக்கம், நெஞ்சு வலி பாதிப்புடன் வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு ஹைப்பா் டிராஃபிக் அடைப்பு எனப்படும் ஹெச்ஓசிஎம் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. மிகவும் அரிதான இந்த மரபணு பாதிப்பு ஏற்பட்டால் இதயத்தின் தசைப் பகுதி தடித்து வீக்கமடைந்துவிடும்.

பொதுவாக, பெரியவா்களிடம் காணப்படும் இத்தகைய பாதிப்பு, குழந்தைகளுக்கு ஏற்படும்போது உயிருக்கே அச்சுறுத்தலாக அமையலாம்.

அந்த வகையில், சிறுமிக்கு அதுபோன்ற இடா்வாய்ப்பு இருந்தது. மேலும், பெருந்தமனிக்கு கீழே திசு வளா்ச்சியும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து உயா் தொழில்நுட்ப அறுவை சிகிச்சையில் இதயத் தசை தடிமன் சரி செய்யப்பட்டது. அதனுடன், திசு கட்டியும் அகற்றப்பட்டது. தற்போது அந்தச் சிறுமி நலமுடன் உள்ளாா் என்றாா் அவா்.