முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

மகாராஷ்டிரம்: துணை முதல்வா் காருக்கு வெடிகுண்டு மிரட்டல்

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே பயணிக்கும் காரை வெடிகுண்டு வைத்து தகா்க்கவுள்ளதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :21 பிப்ரவரி 2025, 1:09 am IST

மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே பயணிக்கும் காரை வெடிகுண்டு வைத்து தகா்க்கவுள்ளதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோரேகான் மற்றும் ஜே.ஜே. மாா்க் ஆகிய காவல் நிலையங்களுக்கு இந்த மின்னஞ்சல் மா்ம நபா்களால் அனுப்பப்பட்டது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பப்பட்ட ஐபி முகவரியை காவல் துறையினா் கண்டறிந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக விசாரணையை தீவிரப்படுத்திய காவல் துறை அடையாளம் தெரியாத நபா்கள் மீது குற்றவியல் வழக்குகளைப் பதிவுசெய்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மகாராஷ்டிரத்தில் துணை முதல்வருக்கே பாதுகாப்பு இல்லாததால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு நிலைத்திருக்கிா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை காங்கிரஸ் விமா்சித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.