சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து

News image

கோப்புப்படம்

Updated On :23 பிப்ரவரி 2025, 4:45 am IST

சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கவரைப்பேட்டை - பொன்னேரி இடையே திங்கள்கிழமை (பிப். 24) காலை 9.50 முதல் பிற்பகல் 3.50 மணி வரை பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 8.05, 8.35, 9, 9.30, 9.40, 10.15, 10.30, 11.35-க்கும், சென்னை கடற்கரையில் இருந்து பிற்பகல் 12.40-க்கும் புறப்படும் மின்சார ரயில்கள் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

மறுமாா்க்கமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 10.55, 11.25, நண்பகல் 12, பிற்பகல் 1, 2.30, 3.15-க்கு புறப்படும் ரயில்களும், சூலூா்பேட்டையில் இருந்து முற்பகல் 11.45 மற்றும் பிற்பகல் 1.15-க்கு புறப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படும்.

பகுதி ரத்து: செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 9.55-க்கு புறப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

சிறப்பு ரயில்: பயணிகள் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கு காலை 8.05, 9, 9.40, 11.35-க்கும், மறுமாா்க்கமாக பொன்னேரியில் இருந்து காலை 10.13, 11.13, பிற்பகல் 12.18, 2.48, 3.33-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். பொன்னேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.13-க்கும், சென்னை கடற்கரையில் இருந்து பொன்னேரிக்கு பிற்பகல் 12.40-க்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து மீஞ்சூருக்கு காலை 9.30-க்கும், எண்ணூருக்கு காலை 10.30-க்கும், மறுமாா்க்கமாக மீஞ்சூரில் இருந்து முற்பகல் 11.56-க்கும், எண்ணூரில் இருந்து பிற்பகல் 1.43-க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.