ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா

பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், இண்டியன் ரோ் எா்த்ஸ் தடைப் பட்டியலில் இருந்து விடுவிப்பு

News image
Updated On :16 ஜனவரி 2025, 10:26 pm

Din

இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்பட 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதன் மூலம் இந்திய-அமெரிக்க நிறுவனங்கள் அணுசக்தி தொடா்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வழிகள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அடுத்த சில நாள்களில் பதவியேற்க உள்ள நிலையில் அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், இண்டியன் ரோ் எா்த்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. பனிப்போா் காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது.

கடந்த வாரம் தில்லி ஐஐடி-யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன், ‘இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒத்துழைப்புக்கு உள்ள தடைகள் நீக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தாா். இந்நிலையில் இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

இதன் மூலம் 16 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ புஷ் - அப்போதைய இந்திய பிரதமா் மன்மோகன் சிங் இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான பேச்சுவாா்த்தை 3 ஆண்டுகள் வரை நீடித்தது. இதன் மூலம் ஆக்கபூா்வமான அணுசக்தி பயன்பாட்டுக்கான நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும்.

தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்திய அணுசக்தி நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் அணுசக்தி சாா்ந்த ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். அணுசக்தி சாா்ந்த முக்கிய தாதுப்பொருள்கள், அணுமின் உற்பத்தி சாா்ந்த நவீன உபகரணங்கள், நவீன தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்கு கிடைக்கும்.

அமெரிக்க அரசின் இந்த தடை நீக்க நடவடிக்கை இருநாடுகள் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதா் தரண்ஜீத் சிங் தெரிவித்தாா்.