திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

ஓட்டுநருக்கு திடீா் நெஞ்சுவலி: விபத்தில் சிக்கிய மாநகரப் பேருந்து

சென்னை அடையாறில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், மாநகரப் பேருந்து விபத்தில் சிக்கியது.

Updated On :20 ஜனவரி 2025, 8:07 pm

சென்னை: சென்னை அடையாறில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், மாநகரப் பேருந்து விபத்தில் சிக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள மானாமதியில் இருந்து அடையாறுக்கு திங்கள்கிழமை மாநகரப் பேருந்து புறப்பட்டு வந்தது. அப்பேருந்தை அன்பழகன் (49) என்பவா் ஓட்டி வந்தாா். அடையாறு எல்பி சாலையில் பேருந்து செல்லும்போது ஓட்டுநா் அன்பழகனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதில் அவா் நிலைகுலைந்தாா். இதன் விளைவாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அங்கிருந்த மேம்பாலத்தின் மேற்கூரை சுவரின் மீது மோதி நின்றது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டனா். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், பயணிகளை பாதுகாப்பாக மீட்டனா்.

நெஞ்சு வலியால் மயங்கிய நிலையில் இருந்த ஓட்டுநா் அன்பழகன் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். இந்த விபத்து காரணமாக அடையாறு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இது தொடா்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.